ABOUT US
Establised in 2020
தமிழகத்தின் தென் கோடியில் 200 ஆண்டுகளுக்கு முன் சிகப்பு மணல் பரவிய தேரிக்காடு, தேரியின் மேற்கு பகுதியில் , அங்கு அங்கங்கே சிறு அளவில் பூர்வீக குடிகளாய் வசித்தனர்.
1800 ல் கிறித்தவ மிஷனரிகள் அந்த பூர்விக குடிகளைக் கொண்டு நிறுவிய ஒரு கிராமம் நாசரேத். பின்னர் ஒவ்வொரு மிஷனரியின் தன்னலமற்ற உழைப்பால் ஆசீர்வதிக்கப்பட்ட நகரமாக விரிவாகியது. கல்விச்சாலைகள், பயிற்சிக்கூடங்கள், மருத்துவமனை, தெரு அமைப்பு, ரயில் பாதை, சாலை வசதி என்று பெருமைமிக்க நகராக பரிமளித்தது.
அக்கால இளைஞர்கள் வேலை தேடி பர்மா, மலேயா, இலங்கை,எஸ்டேட் என்று 1950 வரை பயணப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவில் வர்த்தக, அரசுப்பணி, கல்விப்பணி என உள்நாட்டிலேயே டெல்லி, மும்பை, சென்னை, கோவை, மதுரை என்று பல நகர்களுக்கு சென்றார்கள், குடும்பம் நாசரேத்திலேயே சம்பாதித்து ஊர் திரும்பி விடுவார்கள். 1950 க்கு பிறகு அப்படி சென்னை நோக்கி வந்தவர்கள் இங்கேயே வீடு கட்டி நிரந்தரமாகி விட்டார்கள். இருப்பினும் தமது சொந்த ஊரின் அடையாளத்தை நெஞ்சில் கொண்டிருந்தார்கள்.
அக்காலகட்டத்தில் சென்னையில் குடியேறிய பல தென் மாவட்ட ஊர்களை சேர்ந்த மக்கள் அவரவர் ஊர் பேரில் சங்கம் அமைத்து ஒரு ஐக்கியமாக இருந்தார்கள். சென்னையில் வசிக்கும் நாசரேத் மக்களிடையேயும் அப்படி ஒரு சங்கம் வேண்டும் என்று 1978ல் டாக்டர் சுசிகரன் தங்கசாமி, திரு.VPD நாயகம் இன்னும் பலர் இணைந்து நாசரேத் மக்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நாசரேத்திற்கு சென்னையிலிருந்து அரசு பேருந்து, சிறப்பு ரயில் பெட்டி இணைப்பு, நாசரேத் வரலாற்று நூல் இப்படி பல அரிய பணிகளை ஆற்றி 2003 வரை செயல்பாட்டில் இருந்து வந்த சங்கம் பின்னர் செயல்படவில்லை.
இதனிடையே சென்னையில் வந்து குடியேறிய இளைஞர்கள் ஒன்றிணைந்து நாசரேத் சங்கத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ‘நாசரேத் மக்கள் சங்கத்தின் ‘ நீட்சியாக 2020ல் புதிதாக ‘சென்னை வாழ் நாசரேத் மக்கள் சங்கம்’ தற்போது தோற்றுவிக்கப்பட்டு, அரசிடம் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை வாழ் நாசரேத் மக்களிடையே ஐக்கியம் வலுப்பட்டு பல நற்காரியங்கள் நடக்க சங்கம் பாடுபடும்.
Members
Social Services
Meetings
Committee Members
VISION & MISSION
Experience benefits of networking
Vision
▪︎To start Study Centres at Chennai and Nazareth to enlighten the members and their children and community people
▪︎To create awareness and educate about the value of the Three Pillars of our Constitution which are Executive, Legislative and Judiciary and also the four Elements of Democracy which are Equity, Representation, Liberty and Justice.
▪︎To motivate and support extra-curricular activities like Sports, Music and other individual activities.
▪︎To help students to get Govt jobs cracking TNPSC/UPSC and all other competitive exams.
Mission
To provide accommodation, guidance, and other supportive mechanisms to the eligible members of the Sangam who are people of Nazareth origin and their descendants, to build relationships between the members.